அவர் பருப்பை எடுத்து சாப்பிட தொடங்கியபோது அதில் டேஸ்ட் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார். இதனை அடுத்து உள்ளே பார்த்தபோது அதில் செத்த எலி இருப்பதை கடந்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவருக்கு உடல்நிலை மோசமானதால் இரவு முழுவதும் வாந்தி எடுத்ததாகவும் அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து பன்னிரண்டாம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை. இதனை அடுத்து அவர் உடனடியாக தனியார் செய்தி நிறுவனங்களை அழைத்து பேட்டி கொடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது தான் போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.