பாலியல் துன்புறுத்தலை தட்டிக்கேட்ட மகள், தாயார் இருவருக்கும் அடி உதை

வியாழன், 2 ஜூன் 2016 (16:52 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தலை தட்டிக்கேட்ட 9ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாயார் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார்.


 

 
மால்டா மாவட்டம் காமிக்சாக் பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு நூர் அலி என்னும் இளைஞன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போதும் நூர் அலி பின் தொடர்ந்து சென்று தொந்தரவு செய்துள்ளான்.
 
இதுகுறித்து அந்த மாணவி தன் தாயாரிடம் புகார் செய்துள்ளார். உடனே மாணவியை அழைத்துக் கொண்டு அவரது தாயார் நூர் அலி வீட்டிற்கு சென்று பிரச்சனை தொடர்பாக பேசிக் கொண்டிருக்கும் போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றிபோய் நூர் அலி, மாணவி மற்றும் அவரது தாயாரை இரும்பு கம்பியாம் தாக்கியுள்ளார்.
 
அதை தடுக்க சென்ற கிராம பஞ்சாயத்து தலைவருக்கும் தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
மேலும் அந்த மாணவி, நூர் அலி தன்னை கடந்த ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்