இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட அஜித் பவார் கட்சியைவிட்டு நீக்கி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ( பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
இன்று, மும்பையில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அஜித்பவாரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.