நிலுவையில் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகள்! - மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்!

வியாழன், 21 ஜூலை 2022 (19:39 IST)
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், அதில் நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சிவில் மற்றும் குற்ற வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்களும், நீதிபதிகளும் பலர் உள்ள நிலையில் நாள்தோறும் பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வண்ணம் உள்ளன. பல வழக்குகள் பல ஆண்டுகளாகியும் முடிவடையாமல் இருப்பதும் உண்டு.
 
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில் 72,062 வழக்குகளும், மாநில உயர்நீதிமன்றங்களில் சுமார் 59 லட்சம் வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் சுமார் 4.19 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆண்டுதோறும் மேலும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்