இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களுடன் இயங்கும் இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சம் தெரிவித்திருந்தது. அதன்படி, பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
35 யூ டியூப் சேனல்கள் தவிர்த்து 2 ட்விட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.