தடுப்பூசி உற்பத்தியை பாதியாக குறைக்கும் கோவிஷீல்டு! – காரணம் என்ன?

புதன், 8 டிசம்பர் 2021 (12:01 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு தனது உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்த நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் பல கோடி மக்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி தேவை குறைந்து வருகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை குறைப்பது தொடர்பாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா கூறுகையில் “ஒவ்வொரு மாதமும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 250 மில்லியன் டோஸ் முதல் 275 டோஸ் வரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தேவையை விட உற்பத்தி அதிகரித்து வருவதால் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளோ,. மத்திய அரசு கொடுத்த ஆர்டர்கள் அடுத்த வாரத்துடன் முடிவடையும் நிலையில் புதிய ஆர்டர்கள் அளிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்