பிரதமர் மோடியின் படத்தைக் கிழித்த எம்எல்ஏ உள்பட ஆறு பேர்களுக்கு வெறும் ரூபாய் 99 அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த எம்எல்ஏ ஆனந்த் பட்டேல் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தின் போது துணைவேந்தர் அறையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்தார்.
இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில் துணை வேந்தர் அறையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை கிழித்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் பட்டேல் உள்பட ஆறு பேர்களுக்கு ரூபாய் 99 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.