இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். அதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இதில்,23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை. மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், கொரொனா தொற்று இன்று மேலும் 35 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரானோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயந்துள்ளதாக மத்திய அமைச்சகப் புள்ளிவிவரங்கள் …தகவல் வெளியாகிறது.
மேலும், நேற்றைக்கு வரை,ஆந்திரா, தமிழகம், டெல்லி, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக், ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் பரவியிருந்த கொரோனா வைரஸ், 17 மாநிலங்களில் இருந்து மொத்தம் 19 மாநிலங்களுக்கு பரவியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.