கொரோனா : இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 693 பேருக்கு தொற்று

திங்கள், 6 ஏப்ரல் 2020 (16:40 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருள்ளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,172 பேர்களாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 12 லட்சத்து 82 ஆயிரத்து 41 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,69,451 பேர் குணமடைந்துள்ளானர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 3,36,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 9620 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி - 15,887 ஸ்பெயின் - 13,055 பிரான்ஸ் - 8,078 பேர் உயிரிழந்துள்ளனர் .இந்தியாவில், 4314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், இந்தியாவில் குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், புதிதாக 693 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில்,  மொத்தமாக கொரோனா பாதித்துள்ளோரொன் எண்ணிக்கையில் ஆண்கள் 76% பேர், மற்றும் பெண்கள் 24% பேர்  பாதிப்படைந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்