அடுத்த 4 வாரங்கள்... பீதியை கிளப்பும் கொரோனா !

புதன், 7 ஏப்ரல் 2021 (10:32 IST)
கடந்த ஆண்டை விட கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,15,736 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்தது. புதிதாக 630 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  1,66,177 ஆக உயர்ந்தது.
 
கடந்த ஆண்டை விட கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளது மத்திய சுகாதாரத்துறை, தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த நான்கு வாரங்கள் முக்கியமானவை என்று எச்சரித்துள்ளது. கொரோனா பரிசோதனைகளை குறைத்தது, நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கத் தவறியது, கோவிட் தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாததே பாதிப்பு அதிகரிக்க காரணம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்