ஜம்மு காஷ்மீரில் 3வது அலையா?

புதன், 15 செப்டம்பர் 2021 (21:41 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் இன்று 1600ஐ தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் மட்டும் செப்டம்பர் 1 முதல் 14-ம் தேதி வரை 1,611 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 29.02 சதவிகிதத்திலிருந்து 45 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
 
மேலும் ஜம்மு-காஷ்மீர் சுகாதாரத் துறை புள்ளி விபரத்தின்படி ஆகஸ்ட் 1 முதல் 31 வரை 3,542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும், ஸ்ரீநகரில் மட்டும் 1,028 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்