இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் கேரள மாநில கிளை பிரநிதிகள் அம்மாநில முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதியது. அதில், மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தும் நிலையை எட்டியிருக்கிறது.
இந்நிலையில், கேரளாவில் செப். மாதத்தில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப். மாத துவக்கத்தில் 75,385 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 1,20,721 ஆக அதிகரித்துள்ளது.