இன்று புதிதாக மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3,254 பேருக்கு கொரோனா

புதன், 10 ஜூன் 2020 (23:36 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,76,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 7,745 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 90,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3,254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இன்று மட்டும் 149 பேர் உயிரிழந்தனர்.

எனவே கொரோனாவால்  மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94,041ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 44,517 குணமடைந்துள்ளனர். இதுவரை 3,438 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்