இந்தியாவில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மொத்த கொரோனா பாதிப்புகள் 29,05,823 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து பூரண குணம் பெற்றவர்கள் எண்ணிக்கை 21,58,946 ஆக உள்ளது.