ரயிலில் சிக்க இருந்த இளம்பெண்ணை காப்பாற்றிய போலீசார் ; பாராட்டிய நடிகர் : வைரல் வீடியோ

செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:40 IST)
மும்பையில், ஓடும் ரயிலில் இருந்து குதித்து, ரயில் சக்கரத்தில் சிக்க இருந்த இளம்பெண்னை ஒரு காவல் அதிகாரி காப்பற்றிய வீடியோவை நடிகர் அக்‌ஷய்குமார்,  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாராட்டியுள்ளார்.


 

 
மும்பையின் லோனாவாலா ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் புறப்பட்டது. அப்போது அந்த ரயிலில் இருந்து ஒரு ஆணும், இளம் பெண்ணும் கீழே குதித்தனர். ரயில் வேகமாக நகர்ந்ததால், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்த பெண் தண்டவாளத்தில் மிக அருகிலேயே விழுந்ததால், ரயிலில் சிக்க இருந்தார். அதற்குள், அங்கிருந்த காவலர் பவாண் தாயிடே என்பவர் ஓடிச்சென்று அந்த பெண்ணை இழுத்து காப்பாற்றிவிட்டார். 
 
பெண்ணின் உயிரை காப்பாற்றிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோவை வெளியிட்டு அவரை பாராட்டியுள்ளார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியாவைப் படிக்கவும்