இந்து என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான்: ராகுல்காந்தி!

சனி, 18 டிசம்பர் 2021 (18:24 IST)
இந்து என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான் என காங்கிரஸ் என்று ராகுல் காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இந்து மற்றும் இந்துத்துவா தத்துவத்தை பாஜக கடைப்பிடிக்கின்றது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம் என்பதை நான் கூறுகிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
இந்து என்பதன் உண்மையான அர்த்தம் உண்மையின் வழியை மட்டுமே பின்பற்றுவது என்றும் தனது பயத்தை ஒருபோதும் வன்முறை வெறுப்பு மற்றும் கோபமாக மாற்றாத வழிமுறை என்றும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மகாத்மா காந்தி என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் தற்போது இந்து என்ற அர்த்தத்தையே மாற்றி பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்