சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

செவ்வாய், 29 நவம்பர் 2016 (15:06 IST)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
 
இதனையடுத்து சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த வருகின்றனர்.
 
சமீப காலமாக சோனியா காந்தி உடல் நலக்குறைவு காரணமாக அவதியுற்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் உடல் நலம் காரணமாக சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்