தனியார்மயமாகும் பிஎஸ்என்எல்? மோடி அரசின் அடுத்த திட்டம் என்ன?

புதன், 6 செப்டம்பர் 2017 (13:08 IST)
பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.


 
 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல். இந்த நிறுவனம் பல கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு  போட்டியாக செயல்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடையே உள்ள சந்தை போட்டி காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறதாம். 
 
எனவே, தனியாருக்கு மறைமுகமாக உதவி செய்கிற வகையில் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது என முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
 
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் இதனை உறுதிபடுத்தும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு கைமாற்ற மத்திய பாஜக அரசு ஆணைப் பிறப்பித்திருக்கிறது என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்