மோடி குறித்து கேலி சித்திரம்.. காங்கிரஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய பதிவு நீக்கம்..!

Siva

புதன், 30 ஏப்ரல் 2025 (07:42 IST)
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி மீது காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு வைத்திருக்கும் நிலையில், ‘தேவைப்படும் நேரத்தில் மோடியை காணவில்லை’ என்ற தலைப்புடன் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் கேலிச்சித்திரம் பதிவு செய்யப்பட்டது.
 
இது மிகப்பெரிய அளவில் வைரலானது. அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறப்பு அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாததை விமர்சைக்கு வகையில் இந்த கேலிச்சித்திரம் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த கேலிச் சித்திரத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
 
காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், திடீரென சர்ச்சைக்குரிய கேள்வி சித்தரத்தை காங்கிரஸ் கட்சி தங்களது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்