சீனாவில் முதலீடு செய்யும் அதானி.. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கண்டனம்..!

Mahendran

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (16:03 IST)
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான அதானி சீனாவில் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதை அடுத்து காங்கிரஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. 
 
சீனாவில் கிளை நிறுவனம் ஒன்றை தொடங்க அதானி குழுமம் ஆயத்தமாகி வரும் நிலையில் இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதுகுறித்து கூறியபோது, பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு சீனா குறித்து தெரிவித்த கருத்து இதுவரை எந்த ஒரு இந்திய பிரதமரும் தெரிவிக்காத அபாயகரமான கருத்தாக உள்ளது.
 
அவர் பேசும் பொய், அவரது பேச்சின் வெளிப்பாடு, இந்திய எல்லையை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை எடுத்து வரும் சீனாவுக்கு ஆதரவு தருவது போல் உள்ளது. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகள், முதலீடுகள் ஆகியவற்றின் ஆபத்து குறித்து கண்டு கொள்ளாமல் பிரதமர் இருப்பது தேச குற்றமாகும்.
 
இந்த நிலையில் அதானி குழுமம் சீனாவில் முதலீடு செய்ய திட்டமிட்டதன் மூலம் சீனாவுக்கான ஆதரவு கடிதத்தை மத்திய அரசே தருவதாக தெரிகிறது.  கடந்த சில ஆண்டுகளாக அதானியின் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. வங்கதேசம், இலங்கை, கென்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதானி குழுமம் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்