2024 தேர்தலில் பாஜகவிற்கு காங். சவால் விட முடியும் - பிரசாந்த் கிஷோர்

புதன், 16 மார்ச் 2022 (12:03 IST)
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும் என பிரசாந்த் கிஷோர் பேட்டி. 

 
அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க ஆலோசனை கூறும் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர், 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் வெற்றி குறித்து அவர் கூறிய போது இந்தியாவுக்கான யுத்தம் 2024 ஆம் ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டு முடிவு ஏற்படுமே தவிர தற்போது நடைபெற்ற மாநில தேர்தல் அல்ல பிரதமர் மோடிக்கு இது நன்றாக தெரியும் என்றும் கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து தனது சமீபத்திய பேட்டியில், காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையை சரி செய்ய வேண்டிய நேரம் இது. அதன் ஆன்மா, கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் அனைத்தும் புதியதாக இருக்க வேண்டும். சோனியாகாந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறினாலும் அந்த கட்சி மீண்டும் உயிர் பெற முடியாது. 
 
காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல் படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவிற்கு சவால் விட முடியும். 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்