ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு இ-இன்வாய்ஸ்கள்: மே 1 முதல் அமல் என அறிவிப்பு..!

வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (09:02 IST)
ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டுக்கு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஏழு நாட்களுக்குள் இ-இன்வாய்ஸ்கள் ரசீதுகளை இன்வாய்ஸ் பதவி தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது. இந்த முறை மே 1 முதல் அமலுக்கு வரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இ-இன்வாய்ஸ்கள் பதிவேற்றம் செய்வதற்கு காலக்கடுவை கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு எடுத்துள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் அறிவித்துள்ளது. மே ஒன்றாம் தேதி முதல் ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் வருவாய் என நிறுவனங்கள் ஏழு நாட்களுக்குள் இன்வாய்ஸ் பதவி தளத்தில் தங்கள் பதிவேற்ற வேண்டும் என்றும் ஏழு நாட்களுக்குள் பதிவு செய்யவில்லை என்றால் அந்த இ-இன்வாய்ஸ்களை அதற்கு பிறகு பதிவு செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் 10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களும் இ-இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும் என்றும் படிப்படியாக இந்த முறை அனைத்து தரப்புக்கும் கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்