சிலிண்டர் விலை மீண்டும் குறைப்பு.. சந்தோஷத்தில் பொதுமக்கள்..!

வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:56 IST)
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் சமீபத்தில் 200 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
உஜ்வாலா திட்டத்தின் கீழ் வீட்டு உபயோகிப்பதற்கான சிலிண்டர் பயன்படுத்தும் பயனாளிகளுக்கு 200 ரூபாய் குறைக்க சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது. உடனே இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. 
 
இதனால் சென்னையை 1118.50 ரூபாய் என விற்பனையான சிலிண்டர் விழா ரூ.918.50 என குறைந்தது. இந்த நிலையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை குறைப்பை அடுத்து தற்போது  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
 
19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.15750 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்