பல்கலை வேந்தரானார் முதல்வர்: சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

திங்கள், 13 ஜூன் 2022 (19:37 IST)
முதல்வர்தான் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்கலைக்கழகங்களில் வேந்தராக மாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர் மாநில ஆளுநராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது 
 
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் 
 
இதனை அடுத்து சட்டசபையில் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிக்க மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது
 
இந்த மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை அடுத்து பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்