குடியரசு தலைவர் தேர்தல்: பொது வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி திட்டம்
ஞாயிறு, 12 ஜூன் 2022 (09:06 IST)
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருப்பதாகவும் ஜூன் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இணைந்து பாஜக வேட்பாளருக்கு எதிராக ஒரு குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிறுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம் என்று மம்தா பானர்ஜியின் எண்ணமாக உள்ளது
ஆனால் அதே நேரத்தில் அதிமுக, பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் உள்பட ஒருசில கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் எளிதில் வெற்றி பெற்று விடுவார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன