அனில் ஜெய்சிங்கானிக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு ரத்து

சனி, 30 மே 2015 (01:55 IST)
கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள அனில் ஜெய்சிங்கானிக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
 
இது குறித்து, மும்பையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் வேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக, சூதாட்டக்காரர் அனில் ஜெய்சிங்கானிக்கு, கடந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு காவல்துறை பாதுகாப்பு அளித்தது. இது குறித்து எனக்கு தகவல் தெரிய வந்ததும், இது குறித்து ஆய்வு செய்யுமாறு சட்டசபையிலே அறிவித்தேன்.
 
மேலும், இந்த விவகாரத்தில், கூடுதல் தலைமை செயலாளரை (உள்துறை) அழைத்து, முழுமையான விசாரணை நடத்த உத்திரவிட்டேன். அத்துடன், அனில் ஜெய்சிங்கானிக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெறவும் உத்தரவிட்டேன்.
 
அதன்படி, முதற்கட்டமாக, அனில் ஜெய்சிங்கானிக்கு காவல்துறை பாதுகாப்பு விலகிக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும், அவருக்கு, ஏதற்காக ஏன் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது பற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்