5 வயது சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்.. புகைப்படம் வைரல்..

Siva

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (14:51 IST)
5 வயது சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்ற மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அச்சிறுவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நெகிழ வைத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
கோலாப்பூரில் உள்ள அனந்த்புரம் குடியிருப்பு பகுதியில் ரிதன் சார்லா என்ற சிறுவன் தனது 5வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என விருப்பம் விருப்பம் தெரிவித்தான்.
 
 இந்நிலையில், கோலாப்பூரில் பிரதமர் மோடியின் பேரணியைத் தொடர்ந்து சிறுவன் ரிதனின் பிறந்த நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு சிறுவனுடன் சேர்ந்து கேக் வெட்டி மகிழ்வித்தார். இந்த கொண்டாட்டத்தின்போது அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் முதல்வருடன் இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்