சிவன் கோவில் ஊழியரோடு படுத்து உறங்கும் சிறுத்தைகள்!? – உண்மை பின்னணி என்ன?

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (15:50 IST)
இந்தியாவில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் உள்ள ஊழியர் ஒருவரோடு இரவு நேரங்களில் சிறுத்தைகள் படுத்து உறங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

பொதுவாக காட்டு விலங்குகள் என்றாலே ஆபத்தானவை என்ற அச்ச உணர்வு மக்களிடம் இருந்து வருகிறது, இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் இரவு நேரத்தில் ஒரு நபர் போர்வையை போர்த்தி உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் அருகே சென்ற மூன்று சிறுத்தைகள் நாய்குட்டிகளை போல அவர் அருகில் அன்பாக படுத்து கொள்வதும், அவர் அந்த சிறுத்தைகளுக்கு தலையில் தடவி கொடுப்பதும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள சிலர் இது இந்தியாவின் சிரோஹியில் உள்ள பப்லேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த சம்பவம் என்றும், கோவில் காவலருடன் சிறுத்தைகள் உறங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த சம்பவம் ஆப்ரிக்காவில் நடந்தது என தெரிய வந்துள்ளது. அங்குள்ள சிறுத்தைகள் காப்பகத்தில் பிறந்து வளர்ந்த சிறுத்தைகள் வீட்டு விலங்குகள் போல பழகுவதாக அந்நாட்டை சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் டால்ப் சி வாக்கர் என்பவர் 2019ம் ஆண்டில் வெளியிட்ட வீடியோவின் ஒரு பகுதி இது என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்