மலிவு விலை விமான சேவை அளிக்கும் நிறுவனங்கள்: பட்டியல் இதோ...

திங்கள், 28 மே 2018 (20:39 IST)
சர்வதேச அளவில் மலிவு விலையில் விமான சேவை அளிக்கும் நிறுவனங்கள் எவை என்பது குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் வலைத்தளம் ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.  
 
இதில் மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஏர் ஏசியா எக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் உலகிலேயே மலிவு விலையில் விமான சேவை அளிக்கும் நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 
 
இப்பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் நிறுவனம் இரண்டாவது இடமும், இண்டிகோ நிறுவனம் 5வது இடமும் பெற்றுள்ளன.
 
டாப் 5 மலிவு விலை விமான சேவை நிறுவனங்களில் இந்தோனேசியா ஏர் ஏசியா நிறுவனம் 3 ஆம் இடமும், ப்ரிமெரா ஏர் நிறுவனம் 4 ஆம் இடம் பெற்றுள்ளன. 
 
இப்பட்டியலில் 12 ஆம் இடத்தை ஜெட் ஏர்வேஸ் மற்றும் 13 ஆம் இடத்தை ஏர் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்