தற்கொலைக்கு தூண்டிய வழக்கு… அர்னாப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

சனி, 5 டிசம்பர் 2020 (11:03 IST)
கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் அவரது தாயாரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கட்டிட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் மற்றும் அவரது தாயார் 2018-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக அர்னாப் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணைக்காக இப்போது மும்பை போலிஸார் அர்னாப்பை கைது செய்தனர்.அவரது வீட்டுக்கு சென்று அவரை தரதரவென்று இழுத்து சென்றது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் சில வார நீதிமன்ற காவலுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவர் ராய்காட் போலீசார் அலிபாகில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையில் உள்ள 1,914 பக்கங்கள் அர்னாப் உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தற்கொலைக்கு இவர்கள் மூவரும் எப்படி காரணமாக இருந்தனர் என்பது குறித்து தெரிவித்துள்ளனர். அதில் 50 க்கும் மேற்பட்ட சாட்சிகளின் அளித்த விவரங்கள் உள்ளதாகவும் அதில் ஒன்பது அறிக்கைகள் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்