இந்தியா சாதனை.. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்

புதன், 23 ஆகஸ்ட் 2023 (18:06 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய விக்ரம் லேண்டர்  நிலவில் மிகவும் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. உலக அளவில் இந்தியா செய்த சாதனையாக கருதப்படுகிறது. 
 
நிலவில் தடம் பதித்ததன் மூலம் உலக நாடுகளை இந்தியா திரும்ப பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் லேண்டர் நிலாவுக்கு மிக அருகில் சென்று 100 மீட்டர் தொலைவில் இருக்கும் போது தான் இறங்கும் இடம் பத்திரமானது என்பதை புகைப்படம் எடுத்து உறுதி செய்தது.
 
இதனை அடுத்து விக்ரம் லேண்டர் மிகவும் வெற்றிகரமாக தர இறங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.  திட்டமிட்டபடி நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கியதை அடுத்து இந்தியா உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது என்பதும் இது உலக சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
விக்ரம் லேண்டர் தரை இறங்கியவுடன் இந்திய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்