நெருங்கி வரும் கொண்டாட்டங்கள்... 144 போட அறிவுறுத்தல்!

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:36 IST)
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,715 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,36,97,581 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவை பயன்படுத்தவும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாக்கள், கூட்டங்கள் போன்றவற்றால் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்கம் படி இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்