முன்னதாக கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தினால் சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு புதிய மசோதா ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி மனிதர்களை கழிவுகளை அள்ள செய்வதை தடுத்தல், முழுவதும் எந்திரங்களை பயன்படுத்துதல், மீறும் தனிநபர், நிறுவனத்திற்கான அபராதம் மற்றும் சிறை தண்டனையை அதிகப்படுத்துதல் ஆகிய புதிய சட்ட திட்டங்களை சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.