இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் மே 1 முதல் 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை அதிகரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு ரூ.150 என்றும், மாநில அரசுக்கு ரூ.400 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.