கேரளாவில் ஊரடங்கு அவசியம்: மத்திய அரசு பரிந்துரை

சனி, 4 செப்டம்பர் 2021 (12:50 IST)
கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு லாக்டவுன் அமல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 30 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவில் தற்போது ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலபடுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வார நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே, கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு லாக்டவுன் அமல்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆனால், கேரளாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பால் மீண்டும் முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்