ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை? புதிய விதிகளுக்கு பதிலளிக்காததால் நடவடிக்கைக்கு வாய்ப்பு!

செவ்வாய், 25 மே 2021 (08:01 IST)
சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை ஏற்படுத்திய நிலையில் இந்த புதிய விதிகள் குறித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது குறித்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என தெரிகிறது. எனவே மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதில் அளிக்காத நிலையில் இத்தகைய சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கவும் வழக்கு பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால் இன்றுக்குள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பதிலளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்