உக்ரைனில் படித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!

செவ்வாய், 28 மார்ச் 2023 (17:42 IST)
உக்ரைன் நாட்டில் படித்து போர் காரணமாக படிப்பை பாதியில் விட்டு திரும்பி வந்த இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த போது போரின் தாக்குதல்தாங்க முடியாமல் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர் டிப்பை பாதியில் விட்டுவிட்டு நாடு திரும்பினார். 
 
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் படித்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது 
 
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டு தேர்வு எழுத வாய்ப்பு தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு உக்ரைன் நாட்டில் படித்த மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்