ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம்; புதிய குழு நியமனம்: மத்திய அரசு கரிசனம்!!

திங்கள், 6 நவம்பர் 2017 (11:18 IST)
ஜிஎஸ்டி திட்டத்தில் அதன் விதிமுறைகளில் மாற்றம் கொண்ட வர புதிய ஆலோசனை குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. 


 
 
மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இந்த வரி விதிப்பால் வர்த்தகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். ஜிஎஸ்டி திட்டத்திற்கு பல எதிர்ப்புகளும் எழுந்தன.
 
இதையடுத்து இதை எளிமைப்படுத்தவும் வரி விதிப்பு கட்டமைப்பை மாற்றியாமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட புதிய குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. 
 
ஜிஎஸ்டி கவுன்சிலின் சட்ட ஆய்வு கமிட்டிக்கு உதவிட 6 பிரதிநிதிகள் கொண்ட ஆலோசனை குழு மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியின் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த குழு ஜிஎஸ்டி வரி சட்டம், அதன் விதிமுறைகளில் செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்து விவாதிக்கும். இந்த குழுவின் முதல் கூட்டம் வருகிற 8 ஆம் தேதி நடைபெருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்