காவிரி மேலாண்மை வாரியம் அமைவதால் அணையின் கட்டுப்பாடு இனி கர்நாடகத்திடம் இல்லை!
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (18:27 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்தில் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழக விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைய இருப்பதால் அணையின் கட்டுப்பாடு இனி கர்நாடக அரசிடம் இருந்து காவிரி மேலாண்மை வாரியத்திடம் போய்விடும். இதனால் கர்நாடக அரசின் பலம் தளர்ந்துவிடும்.
2007-இல் காவிரி தீர்ப்பாயம் கொடுத்த இறுதி தீர்ப்பின் படி தமிழகத்துக்கு ஆண்டுக்கு 192 டிஎம்சி தண்ணீர் அளிக்கப்பட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அணை கட்டுப்பாட்டை அந்த வாரியமே எடுத்துக்கொண்டு தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடும்.
இப்போது போல கர்நாடகாவிடம், தமிழகம் போராடிக்கொண்டிருக்க நிலமை வராது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் அணை மீதான தங்கள் கட்டுப்பாடு கர்நாடகம் இழந்துவிடும். ஒரு வழியாக தமிழகத்தின் நீண்ட நெடும் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.