உயிருக்கு போராடும் குழந்தை : ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்ற கார் (வீடியோ)

சனி, 21 அக்டோபர் 2017 (16:01 IST)
உயிருக்கு போராடும் குழந்தையுடன், ஆம்புலன்ஸ் வண்டி சென்று கொண்டிருந்த போது, அதற்கு வழி விடாமல் சென்ற காரின் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.


 

 
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பெரும்பாவூர் மருத்துவமனையில், பிறந்த குழந்தை ஒன்று மூச்சுத் திணறலால் அவதிப்பட்டது. எனவே, மேல் சிகிச்சைக்காக அந்த குழந்தையை கலம்சேரி என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
 
அப்போது, அனைத்து வாகனங்களும் ஆம்புலன்ஸிற்கு வழி விட்டு ஒதுங்கி நிற்க, ஆம்புலன்ஸின் முன்னால் சென்ற ஒரு கார், நீண்ட நேரம் வழிவிடாமல் சென்று கொண்டே இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவில் பலமுறை ஒலி எழுப்பியும் அந்த காரின் டிரைவர் வழிவிட வில்லை.
 
இதனால், 25 நிமிடத்தில் செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு செல்ல 35 நிமிடம் ஆனது. அதாவது 15 நிமிடம் தாமதமானது. இதையடுத்து, முன்னாள் சென்ற காரை வீடியோ எடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர், ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், வண்டியின் எண்ணைக் கொண்டு உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அந்த வண்டியை ஓட்டி சென்ற ஜோஸ் என்பவரிடம் நடத்திய விசாரணையில், ஆம்புலன்ஸு வண்டியின் முன்பு பாதுகாப்பு வாகனம் போல் தான் சென்றதாக சப்பைக்  கட்டு கட்டியுள்ளார். ஆனாலும், அவரை போலீசார் கைது செய்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்