புர்ஹான் வானி ஒரு கதாநாயகன் அல்ல: மோடி கவலை

புதன், 13 ஜூலை 2016 (17:07 IST)
சுட்டுக் கொலை செய்யப்பட்ட புர்ஹான் வானியை கதாநாயகன் போன்று சில ஊடகங்கள் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். 


 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் பகுதியில், தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் ஹிஜ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி உள்பட தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். 

அதனையடுத்து, அம் மாநிலத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுட்டுக் கொலை செய்யப்பட்ட புர்ஹான் வானியை மீது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக பல வழக்குகள் உள்ளன. அவை அனைத்துமே மிக மோசமான குற்றச் செயல்களாகும். பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு, நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்ட புர்ஹான் வானியை கதாநாயகன் போன்று சித்தரிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்