இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

செவ்வாய், 7 ஜூன் 2022 (07:59 IST)
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் எப்போது என்பது குறித்த தகவலை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவில் புல்லட் ரயில் அமைப்பதற்கான ஆலோசனை மற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
 
இந்த நிலையில் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் வரும் 2026ஆம் ஆண்டு இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 
 
சுமார் ஒரு லட்சம் கோடி செலவில் அமைக்கப்படும் இந்த ரயில்சேவை அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்