மத்திய பட்ஜெட்டால் எந்தெந்த பொருட்கள் விலை உயரும்? எந்தெந்த பொருட்கள் விலை குறையும்?

Mahendran

செவ்வாய், 23 ஜூலை 2024 (19:26 IST)
மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள், அரசியல்வாதிகள் உள்பட பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பட்ஜெட் காரணமாக எந்தெந்த பொருட்களின் விலை உயரும் எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பதை பார்ப்போம். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வரி குறைப்பு காரணமாக செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், கடல் உணவுகள், புற்றுநோய்க்கான மருந்துகள் தோல் மற்றும் காலணி பொருட்கள் ஆகியவற்றின் விலை குறையும்.அ

அதேபோல் சோலார் பேனல்கள், அவற்றின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை குறையும்.  ஆனால் அதே நேரத்தில் அமோனியம் நைட்ரேட் பிளாஸ்டிக் பொருட்கள் தொலைதொடர்பு உபகரணங்கள் ஆகியவற்றின் பொருட்கள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமானத்தில் பயணம் செய்வது விலை உயரும் என்பதும், சிகரெட்டுகள் விலை உயர்ந்து காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்