ஆந்திராவை எழுப்புவதற்கான பட்ஜெட்.. நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன சந்திரபாபு நாயுடு..!

Mahendran

செவ்வாய், 23 ஜூலை 2024 (18:20 IST)
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் ஆந்திர மாநிலத்தை தட்டி எழுப்புவதற்கான பட்ஜெட் இது என்று நிர்மலா சீதாராமனுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியபோது, ‘ஆந்திர மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் செயல்பட்டதற்கு ஆந்திர மாநில மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பட்ஜெட்டில் அமராவதி, பொலாவரம், தொழில்துறை மையங்கள், பின் தங்கிய பகுதிகளை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஆதரவு ஆந்திர மாநிலத்தை தட்டி எழுப்புவதற்கு நீண்ட தூரம் செல்லும். இந்த முற்போக்கான நம்பிக்கையை அளிக்கும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்த உங்களை நான் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சந்திரபாபு நாயுடு மகன் மற்றும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், மத்திய அரசுக்கு நன்றி , இந்த பட்ஜெட் எங்கள் மாநிலத்திற்கு கிடைத்த புதிய உதயம் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்