17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல் நிறுவனம்.. மத்திய அமைச்சர் பெருமிதம்..!

Mahendran

சனி, 15 பிப்ரவரி 2025 (08:51 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பின்னர் லாபத்தில் சென்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
 
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 262 கோடி ரூபாய் நிகர லாபமாக பிஎஸ்என்எல் பெற்றுள்ளதாக அவர் கூறினார். 
 
கடந்த 2007ஆம் ஆண்டில்தான் கடைசியாக பிஎஸ்என்எல் லாபத்தை கண்டது என்றும், இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 8.4 கோடி சந்தாதாரர்களாக இருந்த எண்ணிக்கை, டிசம்பரில் 9 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த நிதியாண்டின் லாபத்தை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 15 சதவீதம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. அதேபோல், பைபர் இணைய சேவை, தொலைத்தொடர்பு கம்பி வழித்தட குத்தகை வருவாயும் கிடைத்துள்ளது. மேலும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செலவு குறைந்ததால், கடந்த ஆண்டைவிட 1,700 கோடி ரூபாய் நஷ்டமும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்