’டிக் டாக் ’-ல் துப்பாக்கியுடன் இருந்த சிறுவன் பலி ? விபரீதங்களை உணர்வரா...?

வெள்ளி, 14 ஜூன் 2019 (13:32 IST)
சமீபகாலமாக சமூக ஊடகங்களின் தாக்கம் பொதுமக்களை அதிகளவு ஈர்த்துவருகிறது. தங்களை சினிமா ஸ்டார் போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக டிக் டாக்கில் பெரும்பாலானவர்கள் வினை தெரியாமல் சில விபரீதங்களுக்கு ஆட்படுவது தொடர்ந்துகொண்டே உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகமது தெருவில் வசித்துவந்தவர் ஒருவர் சமீபத்த்தில் இறந்துவிட்டார். அதனால் அவரது உறவினர்கள் சிலர் அவருக்ககுக் காரியங்களைச் செய்வதற்காக ஷீரடி நகருக்கு வந்திருந்தனர்.
 
ஒரு ஹோட்டலில்  அனைவரும் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்களுள் பிரதிக் வடேகர் என்ற சிறுவனுடன் , சில இளைஞர்களும் தங்கி இருந்தனர். 
 
இந்நிலையில் நேற்று காலையில் பிரதிக் , டிக் டாக் கில் வீடியோ ஒன்றைப் பதிவிட விரும்பினான். அதற்கு தனது உறவினர் ஒருவரது துப்பாக்கியை வாங்கி அதில் ஸ்டைலாக நிற்பது போன்றி வீடியோ பதிவு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கியிலிருந்து குண்டு வெடித்து பிரதிக் சம்பவ இடத்த்திலேயே இறந்தார்.
 
துப்பாக்கிச் சப்தம் கேட்டு ஊழியர்கள் அறைக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கிருந்த இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் பிரதிக் உடலை உடற்கூரி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தப்பி ஓடிய 3 பேரைக்  கைது செய்துள்ள  போலீஸார் தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர். 
 
பொழுதுபோக்குக்காக செய்யப்படும் விளையாட்டுகளும் வீடியோக்களும் சில நேரங்களில் உயிரைப் பறிக்குமாயின் அதனை விட்டு விலகி இருப்பதே அனைவருக்கும் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்