பாம்பு கடித்தால் உயிரிழந்த சிறுவனின் உடலை ஆற்றில்வீசிய நிலையில் 15 ஆண்டுகள் கழித்து அந்த சிறுவன் வாலிபனாக உயிருடன் திரும்பி வந்தது வெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஆங்கேஷ் யாதவ் என்பவர் 10 வயதாக இருக்கும்போது பாம்பு கடித்தது. இதனை அடுத்து நுரை தள்ளி சிறுவன் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து ஆங்கேஷ் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற நிலையில் அந்த சிறுவனின் உடல் மோசமடைந்து உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து அந்த ஊரின் வழக்கப்படி சிறுவனின் உடலை வாழைத்தண்டில் வைத்து சரயு ஆற்றில் விட்டனர். இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த சிறுவன் வாலிபர் ஆகி அதே ஊருக்கு திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.