8 நிமிட இடைவேளைக்கு லீவ் எடுக்கச் சொன்ன முதலாளி- பெண் ஊழியர் வேதனை

திங்கள், 1 ஜனவரி 2024 (20:40 IST)
8 நிமிடம் இடைவேளை எடுத்ததற்காக விடுப்பு எடுக்கும்படியும், உடனடியாக ஆன்லைன் வராவிட்டால் விடுப்பு என குறிப்பிடுவதாக' 'முதலாளி தன்னை வற்புறுத்தியதாக பெண் ஊழியர் ஒருவர் Reddit சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் தீவிரமடைந்தபோது, உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள், மீடியா, தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்கள்  நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யலாம் என்று கூறினர்.
 
இதனால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பது பிரபலமானது. இதில் பல ஊழியர்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருத்துகள் வெளியானது.
 
ஆனால், இதிலும் சிலர்  பாதிக்கப்பட்டுள்ளன. அதாவது, ''வீட்டில் இருந்து பணிபுரிந்தபோது கழிவறை செல்ல 8 நிமிடம் இடைவேளை எடுத்ததற்காக விடுப்பு எடுக்கும்படியும், உடனடியாக ஆன்லைன் வராவிட்டால் விடுப்பு என குறிப்பிடுவதாக' 'முதலாளி தன்னை வற்புறுத்தியதாக பெண் ஊழியர் ஒருவர் Reddit சமூக வலைதளத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்