விநாயகர் சிலை கரைப்பில் படகு கவிழ்ந்து விபத்து : 11 பேர் பலி

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (19:35 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், விநாயகர் சிலை கரைப்பில் ஈடுபட்ட மக்கள் 10 க்கும் மேற்பட்டோர் படகு கவிழ்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை அடுத்துள்ள கட்லபுரா என்ற ஏரி உள்ளது. இங்கு விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
அப்பொழுது, அங்கிருந்த 10க்கும் மேற்பட்டோர், ஒரு படகில் ஏறி, விநாயகர் சிலைகளைக் கரைக்க முடிவு செய்தனர்.  அங்கு ஏரியில் இருந்த ஒரு படகில் ஏறினர்...பின்னர் சிலையின் அதிக எடையால், படகு ஆற்றில் தள்ளாடியபடி, எதிரே வந்த படகுகளுடன் மோதி,  தண்ணீருக்குள் விழுந்தது. இதில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி பலியாகினர். ஆற்றில் முழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து ,ம.பி., முதல்வர் கமல்நாத்,உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரு. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து, விசாரணை நடத்த,உத்ரவிட்டுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்