கருங்காலி மரத்தில் இருந்து பெறப்படும் பலகைகளை, கருங்காலி பலகை என்பர். இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன.
கருங்காலி மரத்தின் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் ரத்தக் குறைவால் உருவாகும் திமிர் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.
பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலை குறைக்கும்.